×

2வது சுற்றில் சினியகோவா

குவாதலஜாரா: மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, செக் குடியரசின் கேதரினா சினியகோவா தகுதி பெற்றார். முதல் சுற்றில்  பிரசேில் வீராங்கனை பீட்ரிஸ் மயாவுடன் (26 வயது,  18வது ரேங்க்) மோதிய சினியகோவா (26 வயது, 54வது ரேங்க்)   7-5,  6-2 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 38 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. மற்றொரு முதல் சுற்று ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை யெலனா  ஆஸ்டபென்கோ (25 வயது, 23வது ரேங்க்) 6-1, 6-3 என நேர் செட்களில் அமெரிக்காவின் லாரன்  டேவிஸை (29 வயது, 89வது ரேங்க்) வீழ்த்தினார். 2வது சுற்றில் களமிறங்கிய கரோலின் கார்சியா (பிரான்ஸ்), டாரியா கசட்கினா (ரஷ்யா), மரியா சாக்கரி (கிரீஸ்), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா) ஆகியோர் வெற்றியை வசப்படுத்தினர். முன்னணி வீராங்கனைகள் பெத்ரா குவித்தோவா, கரோலினா பிளிஸ்கோவா, பார்போரா கிரெஜ்சிகோவா அதிர்ச்சி தோல்வியை சந்தித்தனர்….

The post 2வது சுற்றில் சினியகோவா appeared first on Dinakaran.

Tags : Siniakova ,GUADALAJARA ,MEXICO ,OPEN ,CATHERINA SINIKOVA ,CZECH REPUBLIC ,Dinakaraan ,
× RELATED மெக்சிகோவில் தேர்தல் பிரச்சார மேடை...